என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சத்ருகன் சின்கா"
பாட்னா:
நடிகர் சத்ருகன்சின்கா காங்கிரஸ் வேட்பாளராக பாட்னா ஷாகில் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதாவில் இருந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். பாட்னா தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
மே 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கும் அத்தொகுதியில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று பாட்னா தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்கிறார். அப்போது சத்ருகன்சின்கா வீடு வழியாக அமித்ஷாவின் ரோடு ஷோ செல்கிறது.
இதை கண்டித்துள்ள காங்கிரஸ் இது மலிவான அரசியல் என்று விமர்சித்துள்ளது. ஆனால் பா.ஜனதா தரப்பில் கூறும்போது ரோடு ஷோ தனிப்பட்ட நபருக்கு எதிராக நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சத்ருகன் சின்கா கூறியதாவது:-
அமித்ஷா இங்கு தாராளமாக வரலாம். சில பேர் சொல்கிறார்கள் அமித்ஷா இங்கு தனது பலத்தை என்னிடம் காட்ட வருகிறார் என்று கூறுகிறார்கள்.
இந்த தேசம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. அவர்கள் நல்ல மனதுடன் வந்தால் வரவேற்கப்படுவார்கள். அவர்களுக்கு தேநீர், பக்கோடா கூட வழங்கப்படும். மேலும் அவர்களிடம் பொதுமக்கள் கேள்விகளையும் கேட்பார்கள். அவர்கள் தங்களது பலத்தை காட்டுவதற்காக வருகிறார்கள் என்றால் நான் சொல்கிறேன். அவர்களுக்கு பீகார் குடும்பம் தங்களது பலத்தை காட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் கூறியிருப்பதாவது:-
காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல் இருக்கிறது.
‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ உருவாக்கும் உங்கள் வாக்குறுதி என்ன ஆனது? மற்ற வாக்குறுதிகள் போல் காற்றோடு போய்விட்டதோ? கவலைப்படாதீர்கள். எல்லா இடத்திலும் காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்க நேரம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ShatrughanSinha #BJP
பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன்சின்கா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
ஆனால் பா.ஜனதா மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவர் போட்டியிட்டு 2 முறை வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை நிறுத்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது.
இதை தொடர்ந்து தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து ஹோலி பண்டிகைக்கு பிறகு அறிவிப்பதாக சத்ருகன் சின்கா தெரிவித்து இருந்தார்.
சத்ருகன் சின்கா காங்கிரஸ் கட்சி சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
அவர் 2009 தேர்தலில் 1.66 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2014 தேர்தலில் 2.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். அந்த தொகுதியில் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.
சத்ருகன்சின்கா, வாஜ்பாய் மந்திரிசபையில் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நல மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #congress #shartrughansinha
பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகின்றனர்.
லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார் நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். #NDACandidates #Bihar #RaviShankarPrasad
புதுடெல்லி:
ரபேல் விவகாரத்தில் ‘நாட்டின் காவலர்’ என்று தன்னை கூறிக் கொண்ட பிரதமர் மோடி அரசுப் பணத்தை களவாடி தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு அளித்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘நானும் காவலர்’ என்ற கோஷத்தை பிரதமர் மோடி இணைய தளம் மூலம் பரப்பி வருகிறார். பா.ஜனதா ஆதரவாளர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ‘காவலர்’ என்ற அடைமொழியை சமூக வலைதளங்களில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி ‘நானும் காவலர்’ என்ற கோஷத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று பணிவுடன் கூறுகிறேன். ‘காவலரே களவாடிவிட்டார்’ என்ற எதிர்கட்சிகளின் கோஷத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அதை பயன்படுத்த வேண்டாம்.
அந்த கோஷத்தை நீங்கள் பயன்படுத்தினால் ரபேல் பேரம் குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய, இன்னும் விடையளிக்கப்படாத கேள்விகளை மக்களுக்கு தொடர்ந்து நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கும். அந்த கேள்விகளுக்கான பதில்களை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக போதிய முன்னேற்பாடுகள் இன்றி திடீரென்று 25 லட்சம் காவலாளிகளிடம் பிரதமர் மோடி உரையாற்ற வேண்டிய அவசியம் என்ன? அதுவும் 25 லட்சம் காவலாளிகள் என்ற எண்ணிக்கை எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது.
மோடியின் இந்த தற்காப்பு முயற்சியை மக்கள் ரசிக்கப் போவதில்லை. அதிலும் வறுமையில் வாடும் காவலாளிகள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள்.
அவர்களிடம் அர்த்தமற்ற அலங்கார வார்த்தைகளை பேசியதை விட அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, போதுமான அளவுக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயிப்பது போன்றவை குறித்து பிரதமர் மோடி பேசி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ShatrughanSinha #PMModi
பாட்னா:
நடிகரும், பா.ஜனதா அதிருப்தி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மோடி ஒருமுறை கூட நிருபர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று ஒரு கேள்விக்குகூட பதில் அளிக்க வில்லை. இதனால் தனது நிறை, குறைகளை அவரால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
இப்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனிவரும் நாட்களில் மோடி நிருபர்களை சந்திக்க நேரிடும். அதற்காக இப்போது இருந்தே ஒத்திகை பார்த்து எப்படி நடிக்க வேண்டும் என்று உங்களை (மோடி) நீங்களே இயக்கி தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
நான் அறிந்த வரையில் ஜனநாயக உலகில் தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட கேள்வி-பதில்களை எதிர்கொள்ளாத பிரதமர் என்ற மோசமான வரலாறை நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள்.
மோடி தலைமை பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள இதுவே மிகச் சரியான சிறந்த தருணம் ஆகும். எனவே மாற்று அரசு ஏற்படுவதற்கு முன்பு புதிதாக நல்ல தலைமை பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 150-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை அவசரமாக ஒரே மாதத்தில் அறிவித்தீர்கள். இதை மேலோட்டமாக காணும் போது தேர்தல் நடத்தை விதிகளுக்குட் பட்டதாகவே இருக்கும்.
ஆனால் உண்மையில் இது மிக தாமதமாகவும், மிக குறைந்த அளவில் நடத்தப்படும் ஒரு மொத்த வியாபாரத்துக்கு இணையான செயலாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ShatrughanSinha #PMModi
பிரபலங்கள் மீது பெண்கள் பாலியல் புகார் கூறும் மீடூ இயக்கம் கடந்த சில மாதங்களாக நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா இந்த இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.
இந்நிலையில் மீடூ இயக்கம் பற்றி இந்தி நடிகரும் லோக்சபா எம்.பியுமான சத்ருகன் சின்கா கூறியது சர்ச்சையாகி இருக்கிறது. அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-
நான் என் மனைவி சொல்வதை கேட்கிறேன். எந்த புகாரும் இல்லை என்றாலும் என் மனைவியை பல நேரம் உடன் அழைத்துச் செல்கிறேன். மற்றவர்களிடம் நான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று காட்ட முடியும் என்பதுதான் அதன் காரணம். என் மனைவி பூனம் ஒரு பெண் கடவுள். அவர் தான் எனக்கு எல்லாமே. யாராவது என்னைப் பற்றி எதையாவது தெரிவிக்க விரும்பினாலும் தயவு செய்து சொல்லிவிடாதீர்கள்.’
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை உருவாகியுள்ளது. சத்ருகன் சின்கா மகள் சோனாக்ஷி சின்கா இந்தி சினிமாவில் கதாநாயகியாக இருப்பவர்.
சத்ருகன் சின்கா ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். சோனாக்ஷி ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து இருந்தார். #ShatrughanSinha #MeToo
மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதா கட்சிக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சத்ருகன் சின்கா எம்.பி. கலந்து கொண்டார்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்து கொண்ட சத்ருகன் சின்கா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதாப் ரூடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், இதுபற்றி கவனத்தில் கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார். #ShatrughanSinha #MamataBanerjee #Democracy
லக்னோ:
நடிகர் சத்ருகன் சின்கா பா.ஜனதா எம்.பி., ஆக இருக்கிறார். பீகாரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் முன்னாள் மத்திய மந்திரியாகவும் இருந்தார். இவர் பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை கடை பிடித்து வருகிறார்.
எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருவதால் இவர் பா.ஜனதா கட்சியின் அதிருப்தி எம்.பி.ஆக கருதப்படுகிறார். நாட்டில் உள்ள விமான நிலையங்களில் இவருக்கு வி.ஐ.பி. அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் பாட்னாவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு அவர் சென்ற கார் விமான ஓடுதளம் வரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இது குறித்து விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டது.
அதற்கு பதில் அளித்த ஆணையம் சத்ருகன் சின்காவின் வி.ஐ.பி. அந்தஸ்து 5 மாதங்களுக்கு முன்பே காலாவதி ஆகிவிட்டது. அவரது விண்ணப்பத்தை புதுப்பிப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சத்ருகன்சின்கா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் விமான நிலையங்களில் அவருக்கு வழங்கப்பட்ட வி.ஐ.பி. அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இருந்தாலும் இவர் விமான நிலைய ஆலோசனை கமிட்டியின் தலைவராக தொடர்ந்து நீடித்து வருகிறார். #pmmodi #ShatrughanSinha
வாரணாசி:
பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்த போது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ள வதேதரா ஆகிய இரு தொகுதிகளில் மோடி போட்டியிட்டார்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதி பதவியை வைத்துக் கொண்டு, வதேதரா தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.
வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட மோடி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதை கருத்தில் கொண்டே அவர் வாரணாசி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி அமல்படுத்தி வருகிறார்.
வாரணாசி தொகுதி பாரம்பரியமாக பா.ஜ.க. வின் கோட்டையாக திகழ்வதால் அங்கு மீண்டும் களம் இறங்குவதே பாதுகாப்பானது என்று மோடி கருதுகிறார். ஆனால் சமீபத்தில் குஜராத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக வாரணாசியில் மோடிக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வாரணாசி தொகுதியில் பல இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது.
வாரணாசியில் மோடிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளரை களம் இறக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்காவை வரும் தேர்தலில் மோடியை எதிர்த்து களம் இறக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பிரதமர் மோடிக்கும் சத்ருகன் சின்காவுக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சத்ருகன் சின்கா உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்காததால் அவர் மோடியின் ஒவ்வொரு திட்டத்தையும் மிக, மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
விரைவில் அவர் பா.ஜ.க. வில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. அவர் சமாஜ்வாடி கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலின் போது அவரை வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட வைத்தால் மோடிக்கு கடும் சவாலை உருவாக்க முடியும் என்று வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. #ShatrughanSinha #bjp #pmmodi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்